Sunday, May 13, 2012

யாருக்காகவும் காத்திராத என் கால்கள் ...........

உன்னைக் கண்டதும் பரபரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா........
யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா....
ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....
காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும், என் தவிப்புகளையும் பார்த்து
உன் மேல் நான் கொண்ட ஆசையை அறிந்து கொண்டான் அண்ணன்.......
எல்லோரும் தெரிந்து கொண்டனர்
உன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர................

தாயாகவிருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம்..................................

இத்தனை ஆண்டுகள் தவம் இருந்தும்.... இன்னும் 
பத்து மாதங்கள் காத்திருக்கணுமா உன் பூ முகம் காண??? 
தாயாகவிருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம்..
உன்னோடு பேசிய
அன்பு வசனத்தை
நினைத்தேன்...
கண்­ணீராய் பெருகிய
ஆனந்தம்
அதில் நனைந்தேன்...
எந்தன் உள்ளத்தில்
ஓர் உற்சாகம்
உண்டானதே...
இது என் வாழ்க்கையின்
பேருற்சவம்
என்றாகுமே...
காலங்கள் தாண்டிவந்து
எனை ஈர்த்தாய்
எண்ணத்தில் தோன்றி
எனைக் கொன்றாய்...
யாதுமறியாமல் நின்றேனே
உன் நாமம்
அதை மட்டும் நவின்றேனே
யாதுமாகி என்னுள்ளத்தில்
உறைந்தாயே...
யாது இப்போது செய்ய...
யாதுமறியாமலே கேட்கிறேன்...!

Friday, May 11, 2012

ஆறுதல் சொல்ல.................................


உலகில் நான் அதிகம்
நினைவு இன்றி இருந்தது
நீ என்னை
காதலிப்பதாக
கூறிய நாள்தான்
அன்றுதான்
என் வாழ்வில் நிறை
போதையில் இருந்தேன்
அப்போது
நீயே
என் போதையாக இருந்தாய்
அறிவாயா?
மது அருந்தாதபோதும்
என் போதை தலைக்கேறி இருந்தது

வருடம் ஒருமுறை
வரும் பருவ மழைபோல- நீ
வந்து வந்து செல்வதனால்
உன் நினைவுகள் மட்டும்
என்னை சுற்றியே
வட்டம் இடுகின்றன
தவித்த கைகளுக்கும்
தேடி விரல்களுக்கும்
பார்த்த கண்களுக்கும்
ஆறுதல் சொல்ல
என்னால் முடியவில்லை
கொடிய தோழமையும்
கொதித்து ஆறிய நீரும்
பருகியே
என்னுடல்
இறந்து விட்டது

அன்பின் உறைவிடமாய்
தொலைபேசி ஆகியது
மதுவின்
வாடை எனோ பிடிக்கவில்லை

துள்ளல் பாடல் கேட்டு
வருடம் ஆகிறது
துண்டில் மீனுக்கும்
விடுதலை கொடுக்கின்றேன்
துள்ளிதிரிய ஆசை
விம்மி அழுதாலும்
உன்னுடன் அழ வேண்டும்- என்ற அவா?
கானலை என் வாழ்வில் நான்
கண்டு இருக்கின்றேன்
ஆனால்
இன்று இல்லை
அந்த கானலும் நீ தான் தெரியுமா?
தோடி இராகம்
கேட்டதே
உன்னை காதலித்த பின்தான்
விடுகதையாக
என் வாழ்வை
விடுகதையாக்கி
விடையானவள் நீதான்

``````````````````````````````````

அருகிருந்தும் ஒன்று சேராத நாம்,,,,,,,,,,,,,,,,,


அருகிருந்தும்
ஒன்று சேராத
தண்டவாளங்களாய்
நாம் இன்று
ஆனாலும்
நாளை பிரிகின்றோம்

நிலவினை தூக்கில் இட்டு
சூரியக்குளியல்
குளிக்கும் நமக்கு
எஞ்சி இருப்பதெல்லாம்
ஓர் இஞ்சி உடல்தான்
அதை விற்றுமா
ஜெயிக்க வேண்டும்
இந்த உலகில்
வெறுமையிலும்
ஏதோ ஒன்று இருப்பதை
என்னால் கண்டு விட்டேன்
மரணத்திலும் சுகம் உண்டு
என எனக்கு நீ கூறிய பொழுது களில்
நொருங்கி ய நெஞ்சம்
இப்போது மட்டும்
பெருமிதம் கொள்கின்றது

தோழியாய்
காதலியாய்
அம்மாவாய் என்
மனைவியாய் வழும் நீ
ஒரு பொழுதும் எனை விட்டு
பிரிந்து விடாதே
என உள்ளம் தினமும் சொல்கின்றது
ஆனால்
ஆறுதல்
படுத்த முடியவில்லை

நாளை உன்னை
சேர்வதற்காய்
இன்று
உன்னை பிரிகின்றேன்
என்னாலும் இதை ஏற்க முடியவில்லை
உனை சேர்வதற்காய்
இன்று இதை ஏற்று விடுகின்றேன்
நாளை என்பது வெகு தூரத்தில்
இல்லை
என்று நீ சொல்லும் போதெல்லாம்
உடையும் என்மன தினை ஒட்ட வைக்க
உன் நினைவுகளை மட்டுமே
பயன் படுத்துகின்றேன்.........

```````````````````````````````````````````

நான் உனக்காக..............................

நான் உனக்காக
காத்திருந்த
ஒவ்வொரு நொடியும்
சுகமாகத்தான் இருந்தது
அதற்காக
மீண்டும் ஒரு முறை
காத்திருக்க வைத்துவிடாதே
நதி அல்லாத
சில நாள் மரணத்திற்கு
வாழ்க்கைப்பட்ட நான்
மீண்டும் ஒரு முறை
மரணிக்க துடிக்கின்றேன்
ஏனெனில்
உனக்காக
மரணித்த நாட்கள்
சுகமாக இருந்தன
தூரத்தே நிலவு
தொங்கிக்கொண்டு
இருந்த போதும்
அவன் என்னுடன்
சேரக்காத்திருந்தாள்
ஒரு நொடி விலகி
மறு நொடி சேரும்
வரைக்கிடையில்
இருவரும்
ஒருமுறை மரணித்து
இருந்தோம்

Sunday, May 6, 2012

Elephant........


என்ன செய்ய?............................................

போ...
வேதனையின் வலி
இதயத்திலும் இரத்தத்திலும்
ஊரிப் போச்சு...

என்ன செய்ய?
எப்படி கேட்டாலும்
என்னை விட்டு போவதற்கு
ஆசைப்படகிறாய்
போ...

என் நட்பில்
நான் தோற்றாலும்
நீ தோற்கக் கூடாது
உன் நட்பில்
அதற்காய் நீ போ...

என்னிடம் ஏதுமில்லை
உன்னை வழியனுப்ப.
கண்ணீர்தான் இருக்கிறது
கடைசியாய் அதையும்
எடுத்து விட்டு போ...

உன்னால்தான் எதையும்
விட்டுக் கொடுக்க முடியாது
நானாவது கொடுக்க வேண்டுமல்ல
அதற்காகய் நீ போ...

நீ வெட்டி விட்டதே போதும்
உன் விட்டுக்கொடுப்பு
ஏதும் தேவையில்லை போ...
உங்களை விட்டு
நான் போகிறேன்.
நீ காணாத தூரம்

ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம்.

நாளொரு பொழுதாய்
நடைமுறை உலகை
நானும் அவளும்
காணப் புறப்பட்டோம்.
நல்ல நண்பர்களாய்…

ஒரு நாள்…

நிலவை ரசிக்க நினைத்தோம்.
ஆனால்..
இரவுவரை தனித்திருக்கும்
தைரியம் நமக்கிருக்கவில்லை.

நிலவு வரும் வரை நாமிருக்க
நம் கலாச்சார கண்களும்
நம்மை விட்டுவைக்கவில்லை.

இன்னொரு நாள்…

கடற்கரை சென்று
காலாற நடந்து
காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…
நம் கைகளைக் கோர்த்தபடி
காலடி பதித்து
அலை நுரை ரசிக்க முடியவில்லை.

அவள் தடுமாறி
அலைக்குள் விழுந்த போதும்
என்னால் அவளை
அணைக்க முடியவில்லை.
கடலோ அவளை நனைத்துப் போனது.

மூழ்கப் போனவளை
மீட்டு வந்தது கண்டும்
எங்களுக்குள் ஊடல் என்று
ஊர் சொன்னது.

அலை கூட அப்போது
நுரை நுரையாய் சிரித்தது.
காற்றும் ஏதோ
கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.

மழை நாளொன்றில்..
ஒரு குடைக்குள் எங்களால்
நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க
எங்களில் ஒருவர்
மழையில்
நனைய வேண்டியதாயிற்று.

அப்போதெல்லாம்
நட்பு அழுதது.
ஊரோ
துளித்துளியாய் சிரித்தது.

எத்தனையை சுமந்து
நட்பைக் காத்த போதும்

அவன் வாசல்ப் படி வரைக்குமே
என்னால் பயணிக்க முடிகிறது
நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி

இத்தனைக்குப் பின்னும்
எங்கள் நட்பு
செத்துப் போகவில்லை.
உள்ளமும் கெட்டுப் போகவில்லை.
சில வாய்கள் சொன்னதை
எங்கள் செவிகள் கேட்டபோது
ஆறாம் அறிவு
கொஞ்சம் சிந்தித்தது

நட்பை ஏற்காத உலகில்
என்றும் நண்பர்களாய்
வாழ நினைத்ததால்..

அவளுக்கு
இப்போது வாய்க்கட்டு
எனக்கு
இப்போது கால்க்கட்டு
நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது
எனக்கும் அவளுக்கும் இடையில்
எப்போதும்....

Friday, April 6, 2012

உனக்காய் எழுதும் 
மடல்கள் அனைத்தையும் 
என் இதய முகவரிக்கே அனுப்புகிறேன்- நீ 
குடியிருப்பது அங்கென்பதால்

Monday, April 2, 2012

விடியலும் நீயடி................................

.........................................................................
விடியலும் 
அன்பும் 
நெருக்கமும் 
தொல்லையும் 
நான் இறைவனிடம் 
விரும்பி கேட்டவை 
வேதனை மிகுந்த 
என் வாழ்வை
 இன்பமாக்கி 
சாதனையாக்கி 
காட்டியவள் -நீயடி


....................................................................

அன்பின் உறைவிடமாய் ..............................

.........................................................................................
வருடம் ஒருமுறை வரும் பருவ மழைபோல- 
நீ வந்து வந்து செல்வதனால்
 உன் நினைவுகள் மட்டும் 
என்னை சுற்றியே வட்டம் இடுகின்றன 
தவித்த கைகளுக்கும் 
தேடி விரல்களுக்கும் 
பார்த்த கண்களுக்கும் 
ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை 
கொடிய தோழமையும் 
கொதித்து ஆறிய நீரும் 
பருகியே என்னுடல் இறந்து விட்டது 
 அன்பின் உறைவிடமாய் 
தொலைபேசி ஆகியது 
மதுவின் வாடை எனோ -பிடிக்கவில்லை




.............................................................................................

ஒரு பொழுதும் எனை விட்டு பிரிந்து விடாதே ......

.......................................... 
 தோழியாய்
 காதலியாய் 
அம்மாவாய் -என் 
மனைவியாய் 
வழும் நீ 
ஒரு பொழுதும் எனை விட்டு 
பிரிந்து விடாதே -என
 உள்ளம் தினமும் சொல்கின்றது 
ஆனால் 
ஆறுதல் படுத்த முடியவில்லை
 நாளை உன்னை சேர்வதற்காய் 
இன்று உன்னை பிரிகின்றேன்


 ..........................................

அருகிருந்தும் ஒன்று சேராத தண்டவாளங்களாய் நாம்.........

.................................................................. 
 அருகிருந்தும் 
ஒன்று சேராத தண்டவாளங்களாய்- நாம் 
இன்று 
ஆனாலும் நாளை பிரிகின்றோம்
 நிலவினை தூக்கில் இட்டு 
சூரியக்குளியல் குளிக்கும் நமக்கு 
எஞ்சி இருப்பதெல்லாம் ஓர் இஞ்சி உடல்தான் 
அதை விற்றுமா 
ஜெயிக்க வேண்டும் 
இந்த உலகில் வெறுமையிலும் 
ஏதோ ஒன்று இருப்பதை 
என்னால் கண்டு விட்டேன் 
மரணத்திலும் சுகம் உண்டு 
என எனக்கு நீ கூறிய பொழுது களில் 
நொருங்கி ய நெஞ்சம்
 இப்போது மட்டும் பெருமிதம் கொள்கின்றது


 ........................................................................

Wednesday, March 28, 2012

ஏஞ்சல் நதி போல நீ என் மேல் விழுகின்றாய்...........................

ஏஞ்சல் நதி போல
நீ என் மேல் விழுகின்றாய்
நான் புவியை போல
உன்னுடன் மௌனமாக
கரைந்துகொண்டு
இருக்கிறேன்
என் கோப
வெம்மையிலும்
எனை தாங்கும்
தண்மையாக
நீ என் மீது விழும்
போதெல்லாம்
நான் உன்னுடன்
உள்ளத்தில்
இணைந்து போகின்றேன்
நான் காதலிக்கின்றேன்
ஏஞ்சலை போல்
தூரத்தில் இல்லை
அருகே நான் .......................
உன்னுடன்


.............................................................................................................................................

உனக்காக மரணித்த நாட்கள் சுகமாக...................

உனக்காக மரணித்த
நாட்கள் சுகமாக இருந்தன
தூரத்தே நிலவு
தொங்கிக்கொண்டு
இருந்த போதும்
அவள்
என்னுடன்
சேரக்காத்திருந்தாள்
ஒரு நொடி விலகி
மறு நொடி சேரும்
வரைக்கிடையில்
இருவரும்
ஒருமுறை
மரணித்து இருந்தோம்


.......................................................................................................................................

நான் உனக்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும்....................



நான் உனக்காக
காத்திருந்த
ஒவ்வொரு நொடியும்
சுகமாகத்தான் இருந்தது
அதற்காக
மீண்டும் ஒரு முறை
காத்திருக்க வைத்துவிடாதே
நதி அல்லாத
சில நாள் மரணத்திற்கு
வாழ்க்கைப்பட்ட நான்
மீண்டும் ஒரு முறை
மரணிக்க துடிக்கின்றேன்
ஏனெனில்
உனக்காக
மரணித்த நாட்கள்
சுகமாக இருந்தன




..........................................................................................................

நான் உன்னுடன் இருக்க வேண்டும் ......................

நான் உன்னுடன் 
இருக்க வேண்டும் 
என்பதற்காக 
நான் நீ இறந்தால் 
உடனே இறந்துவிடுகிறேன் 
சுதந்திரமாக சிறகடித்து 
பறக்க முடியவில்லை 
ஆயினும் 
மனதினுள்
உன்னுடன் சந்தோஸ 
வாழ்வு 
அனுபவிக்கிறேன்


....................................................................................................................................

Tuesday, March 27, 2012

ஏனோ நகரவேயில்லை..........................

லகம் தன்னை
தினமும் சுற்றுகிறது
என்றறிந்தேன்
நான் இருக்கும் இடம்
மட்டும் ஏனோ நகரவேயில்லை



.................................................................................................................................................................