Friday, May 11, 2012

அருகிருந்தும் ஒன்று சேராத நாம்,,,,,,,,,,,,,,,,,


அருகிருந்தும்
ஒன்று சேராத
தண்டவாளங்களாய்
நாம் இன்று
ஆனாலும்
நாளை பிரிகின்றோம்

நிலவினை தூக்கில் இட்டு
சூரியக்குளியல்
குளிக்கும் நமக்கு
எஞ்சி இருப்பதெல்லாம்
ஓர் இஞ்சி உடல்தான்
அதை விற்றுமா
ஜெயிக்க வேண்டும்
இந்த உலகில்
வெறுமையிலும்
ஏதோ ஒன்று இருப்பதை
என்னால் கண்டு விட்டேன்
மரணத்திலும் சுகம் உண்டு
என எனக்கு நீ கூறிய பொழுது களில்
நொருங்கி ய நெஞ்சம்
இப்போது மட்டும்
பெருமிதம் கொள்கின்றது

தோழியாய்
காதலியாய்
அம்மாவாய் என்
மனைவியாய் வழும் நீ
ஒரு பொழுதும் எனை விட்டு
பிரிந்து விடாதே
என உள்ளம் தினமும் சொல்கின்றது
ஆனால்
ஆறுதல்
படுத்த முடியவில்லை

நாளை உன்னை
சேர்வதற்காய்
இன்று
உன்னை பிரிகின்றேன்
என்னாலும் இதை ஏற்க முடியவில்லை
உனை சேர்வதற்காய்
இன்று இதை ஏற்று விடுகின்றேன்
நாளை என்பது வெகு தூரத்தில்
இல்லை
என்று நீ சொல்லும் போதெல்லாம்
உடையும் என்மன தினை ஒட்ட வைக்க
உன் நினைவுகளை மட்டுமே
பயன் படுத்துகின்றேன்.........

```````````````````````````````````````````

No comments:

Post a Comment