Sunday, May 13, 2012

தாயாகவிருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம்..................................

இத்தனை ஆண்டுகள் தவம் இருந்தும்.... இன்னும் 
பத்து மாதங்கள் காத்திருக்கணுமா உன் பூ முகம் காண??? 
தாயாகவிருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம்..
உன்னோடு பேசிய
அன்பு வசனத்தை
நினைத்தேன்...
கண்­ணீராய் பெருகிய
ஆனந்தம்
அதில் நனைந்தேன்...
எந்தன் உள்ளத்தில்
ஓர் உற்சாகம்
உண்டானதே...
இது என் வாழ்க்கையின்
பேருற்சவம்
என்றாகுமே...
காலங்கள் தாண்டிவந்து
எனை ஈர்த்தாய்
எண்ணத்தில் தோன்றி
எனைக் கொன்றாய்...
யாதுமறியாமல் நின்றேனே
உன் நாமம்
அதை மட்டும் நவின்றேனே
யாதுமாகி என்னுள்ளத்தில்
உறைந்தாயே...
யாது இப்போது செய்ய...
யாதுமறியாமலே கேட்கிறேன்...!

No comments:

Post a Comment